/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
/
காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED : அக் 25, 2025 06:45 PM

மதுரை; காஞ்சி காமகோடி பீடாதிபதி  ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம்  மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் நடந்த விழாவில் மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத்திரவியப் பொடி,.  மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம்,  தேன்,  நெய்,  இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து  ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதணை நடைபெற்றது.
இந்நிகழ்வினை சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

