sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா விளக்குகிறார் ஷ்யாம் குமார்

/

டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா விளக்குகிறார் ஷ்யாம் குமார்

டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா விளக்குகிறார் ஷ்யாம் குமார்

டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா விளக்குகிறார் ஷ்யாம் குமார்


ADDED : நவ 02, 2025 03:35 AM

Google News

ADDED : நவ 02, 2025 03:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ருச்சி சொந்த ஊர், வளர்ந்தது சென்னை. அம்மா லலிதா அகில இந்திய வானொலி நிலையம், மேடை நாடகம், டப்பிங் துறைகளில் பணிபுரிந்தவர். எனக்கு 10 வயதில் அம்மா டப்பிங் பேச ஸ்டுடியோ செல்லும்போது உடன் செல்வேன். அப்படி ஒருநாள் 'காமராஜ்' திரைப்படத்தில் சிறுவயது காமராஜருக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு கிடைத்தது என தன் முதல் வாய்ப்பை விளக்கிய டப்பிங் கலைஞர் ஷ்யாம் குமாரிடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்கு கேள்விகள் தொடுத்த போது...

n ↓ டப்பிங்கில் உங்களின் வளர்ச்சி

2004ல் முதல் வாய்ப்பு கிடைத்த பின்னர் மை டியர் பூதம், மை டியர் ஸ்மால் ஒண்டர், அமெரிக்கன் டிராகன் போன்ற வாய்ப்புகள் வந்தன. பின்னர் ஸ்க்யுட் 2, 3வது சீசன்களில் டப்பிங் முழுப்பொறுப்பும் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது. மொழிமாற்றம், கலைஞர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளையும் செய்தேன்.

n ↓ டப்பிங்கில் சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தை பயன்படுத்துகிறார்களே

ஜெனி போன்ற வெப்சீரிஸில் பணிபுரியும் போது, பாலியல் தொழிலாளியை குறிப்பிடும் வார்த்தைகள் வரும். அதனை சிறுக்கி என மாற்றி இருப்போம். ஜப்பானிய அனிமேக்களில் சரக்கு வேண்டும் என கேட்கும் காட்சிகளை ஆப்பிள் ஜூஸ் என்று மாற்றியிருப்போம். குழந்தைகளின் வயதை மீறிய உரையாடல்கள் இடம்பெறும்போது அதன் தீவிரத்தை குறைப்பது, எளிமையாக, ஒரிஜினலின் கருவை மீறாத வகையில் மொழிபெயர்ப்பது சவாலானது.

n ↓ டப்பிங் துறையில் கற்றது

உடற்பயிற்சி போல விடாமல் கடைபிடிக்க வேண்டிய திறன் டப்பிங் என அம்மா வலியுறுத்துவார். தினமும் டப்பிங் ஸ்டுடியோவில் வேலை செய்வது தான் சவுண்ட் இன்ஜினியர், டப்பிங் இயக்குநர் என பெரிய குழுவாக இயங்கும் ஸ்டுடியோவில் நம்மை விடாமல் பயணிக்க வைக்கும்.

n ↓ வேற்றுமொழி படங்களுக்கு முன்னணி நடிகர்கள் டப்பிங் தருகிறார்களே

அவர்களுக்கு டப்பிங் கலைஞர்கள் அளவிற்கு பொறுமை, நெகிழ்வுத்தன்மை இருக்குமா என்பது சந்தேகம் தான். எல்லா கதாப்பாத்திரங்களுக்கும் முன்னணி நடிகர்களையே பயன்படுத்தும்போது, டப்பிங் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.

n ↓ வேற்றுமொழி படங்களை ஒரிஜினல் மொழியில் பார்ப்பது தான் சிறந்த அனுபவம் என்கிறார்களே

ஒரிஜினல் மொழியை ஆங்கில சப்டைட்டிலில் பார்த்து புரிவதை விட, தாய்மொழியில் பார்க்கும்போது கதையோடு ஒன்றிணையும் அனுபவம் கிடைக்கும். கொரியன், ஜப்பானிய மொழி சீரிஸ்களுக்கு மொழிமாற்றம் செய்யும்போது, நம் கலாச்சாரத்திற்கு ஏற்ப நுணுக்கமாக தழுவும் பணிகளில் ஈடுபடுவேன்.

n ↓ 'லைவ் ரெக்கார்டிங்' டப்பிங் துறையை பாதிக்குமா

டப்பிங் இல்லாமல் லைவ் ரெக்கார்டிங்கில் திரைப்படங்கள் வருவது அபூர்வம்; படப்பிடிப்பில் டயலாக்கில் வரும் குறைகளை டப்பிங்கில் நிவர்த்தி செய்ய முடியும். நடிப்பு இயக்குநரின் எண்ணத்தை உடல்மொழியில் தருவது, டப்பிங் வசனங்களைசெதுக்க முயற்சிகள் நடக்கும் இடம். படத்தின் கதையே டப்பிங் கில் மாறும் சுவாரசியங்களும் நடக்கும்.

n ↓ வாய்ஸ் ஆக்டிங்கிற்கும், டப்பிங்கிற்கும் வித்தியாசம்

டப்பிங் என்பது உருவான காட்சிகளுக்கு வாய்ஸ் கொடுப்பது, வாய்ஸ் ஆக்டிங்கில் காட்சிகள் உருவாகும் முன்பே டயலாக்குகள் பேசப்பட்டு விடும்; பின்னர் அதற்கேற்ப உதட்டசைவில் அனிமேஷன் உருவாக்கப்படுகிறது.

n ↓ டப்பிங் ஆசை உள்ளவர்களுக்கு உங்களின் டிப்ஸ்...

குரல்வளம், மொழியறிவு, மீடியாக்களில் முன் அனுபவம் உள்ளவர்கள் டப்பிங் யூனியனை தொடர்புகொண்டால் உங்களுக்கான கதவுகள் திறக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us