நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : பரவை மங்கையர்க்கரசி மகளிர் கல்லுாரியில் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சமூகம், மதுரை ரோட்டரி கிளப், செஞ்சிலுவை சங்கம் சார்பில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் உமா பாஸ்கர் துவக்கி வைத்தார். கல்வி புலத் தலைவர் செந்துார் பிரியதர்சினி, தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்ட பணியாளர் இனியன் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி, சத்தான உணவுகள் குறித்தும், சமூக சேவகர் ரதீஷ், சமயநல்லுார் அரசு மருத்துவமனை ஆலோசகர் ஆதிலட்சுமி எய்ட்ஸ் குறித்தும் பேசினர். மாணவி பொன் பழனி எய்ட்ஸ் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர்கள் உமாதேவி, ராஜம் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தனர். இஷாஜெயின் நன்றி கூறினார்.

