நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே கல்லணை ஏ.எம்.எம்., மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
பள்ளித் தலைவர் விஜயன் தலைமை வகித்தார். செயலாளார் அன்பழகன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர்கள் நல்லியப்பன், தயாளன் வரவேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. யோகா, கராத்தே, பேச்சு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணைச் செயலாளர் ரவி நன்றி கூறினார்.

