/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீரில் நெற்பயிர்கள்; கண்ணீரில் விவசாயிகள்
/
தண்ணீரில் நெற்பயிர்கள்; கண்ணீரில் விவசாயிகள்
ADDED : ஆக 16, 2025 12:45 AM

சோழவந்தான்; சோழவந்தான் வட்டார பகுதிகளில் சில நாட்களாக பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
சோழவந்தான், காடுப்பட்டி, விக்கிரமங்கலம் பகுதிகளில் முதல் போக பாசனத்தில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். சில நாட்களாக பெய்த மழையால் இந்த வயல்களில் தண்ணீர் தேங்கி நெல் நாற்றுகள் மூழ்கி அழுகிவிட்டன. அணைப்பட்டியில் இருந்து வரும் வடகரை, தென்கரை கால்வாய்களில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் தண்ணீர் சரியாகச் செல்ல முடியவில்லை.
மழை நீர் நிலத்திலேயே தேங்கி நெல் நாற்றுகள் சேதமடைந்து விட்டன. விவசாயி மீனா கூறுகையில், 'வட்டிக்கு கடன் வாங்கி 20 நாட்களுக்கு முன்பு நெல் பயிரிட்டேன். இரண்டு நாட்களாக பெய்த மழையால் நாற்றுகள் நீரில் மூழ்கி அழுகிவிட்டன. மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே இதுபோன்ற நிலை உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என்றார்.