sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கொட்டாம்பட்டிக்கு பாசன கால்வாய் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்

/

 கொட்டாம்பட்டிக்கு பாசன கால்வாய் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்

 கொட்டாம்பட்டிக்கு பாசன கால்வாய் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்

 கொட்டாம்பட்டிக்கு பாசன கால்வாய் அமைக்க தீர்மானம் நிறைவேற்றம்


ADDED : ஜன 27, 2026 06:49 AM

Google News

ADDED : ஜன 27, 2026 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: வலைச்சேரிபட்டி, மணப்பச்சேரி, பட்டூர், அய்யாபட்டி, கேசம்பட்டி, கம்பூர் பகுதி கிராம சபை கூட்டத்தில் கொட்டாம்பட்டி ஒன்றியத்தின் 16 ஊராட்சிகளில் புதிதாக பெரியாறு பாசன கால்வாயை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சொக்கம்பட்டியில் கனிமவளத் துறைக்கு சொந்தமான பாறையில் சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்துவதால் வீடுகளில் வெடிப்பு மற்றும் நீர்வழித்தடங்கள் மாறுவது என பாதிக்கிறது. இதனை கனிமவளத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். நீர்நிலைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலவளவு கைலம்பட்டி கூட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவினர் கோரிக்கைகளை வலியுறுத்தினர். பறம்பு கண்மாய் மடை மற்றும் பாசன கால்வாய் பாதிக்காதவாறு ரோடு, வடிகால் வசதி அமைக்க வேண்டும். பல்லுயிர் மேலாண்மை குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சோமகிரிமலை, பறம்பு கண்மாயை பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க வேண்டும். மரபணு திருத்தம் செய்த நெல் ரகங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது. பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், நல்லெண்ணெய் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்துடன் தொடர்புடைய பணிகளுக்கு பயன்படுத்த வழிமுறை வகுக்க வேண்டும், கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us