/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஹாக்கி உலகக்கோப்பை தயாராகும் ரேஸ்கோர்ஸ் மைதானம்
/
மதுரையில் ஹாக்கி உலகக்கோப்பை தயாராகும் ரேஸ்கோர்ஸ் மைதானம்
மதுரையில் ஹாக்கி உலகக்கோப்பை தயாராகும் ரேஸ்கோர்ஸ் மைதானம்
மதுரையில் ஹாக்கி உலகக்கோப்பை தயாராகும் ரேஸ்கோர்ஸ் மைதானம்
ADDED : செப் 07, 2025 03:46 AM

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வரும் டிசம்பரில் நடக்கவுள்ள உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டிக்கான பார்வையாளர் கேலரி, வீரர்கள் தங்கும் அறைகள் தயாராகி வருகின்றன.
சென்னையில் ஏற்கனவே உலக கோப்பை ஹாக்கி நடந்த நிலையில் மதுரையில் முதன்முறையாக நடக்க உள்ளது. இங்கு ஏற்கனவே உள்ள சர்வதேச ஹாக்கி அரங்கில் இருந்த செயற்கை புல்தரை பிரிக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பார்வையாளர்களுக்கான கேலரி அமைக்கப்படுகிறது.கேலரியின் கீழ்ப்பகுதியில் வீரர்கள், நடுவர்களுக்கான அறைகள் தயாராகின்றன. தலா 150 பேர் அமரும் வகையிலான இரண்டு பார்வையாளர்கள் கேலரி, நடுவில் 87 வி.ஐ.பி.,க்கள் அமர்வதற்கான கேலரி, சிறப்பு 'லவுஞ்ச்' வசதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு கேலரிக்கும் தனிப்படிக்கட்டு, 12 கழிப்பறைகள் கட்டப்பட்டுகின்றன.
அரங்கின் நான்கு புறமும் புதிய ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
தற்போது கேலரியின் மேல்பகுதியில் கான்கிரீட் அமைக்கப்பட்டு 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. கீழ்ப்பகுதியின் முன்புறத்தில் முழுவதும் கண்ணாடி கதவுகள் பொருத்தப்பட்டு குளிர்சாதன வசதி செய்யப்படும். மேற்புறத்தில் திறந்தவெளி கேலரியாக அமைகிறது.
போட்டிக்காக புதிய செயற்கை புல்தரை அமைக்கப்பட்டு அக். 20க்குள் கேலரி பணி நிறைவடைந்து மாவட்ட விளையாட்டு நிர்வாகத்திடம் கட்டடம் ஒப்படைக்கப்படும்.