/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடகைக்கு தனியார் பஸ்கள்: கூடுதல் செலவால் இழப்பு என்று தொழிற்சங்கங்கள் கருத்து
/
வாடகைக்கு தனியார் பஸ்கள்: கூடுதல் செலவால் இழப்பு என்று தொழிற்சங்கங்கள் கருத்து
வாடகைக்கு தனியார் பஸ்கள்: கூடுதல் செலவால் இழப்பு என்று தொழிற்சங்கங்கள் கருத்து
வாடகைக்கு தனியார் பஸ்கள்: கூடுதல் செலவால் இழப்பு என்று தொழிற்சங்கங்கள் கருத்து
ADDED : நவ 01, 2024 05:07 AM
மதுரை: தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் நெரிசலை தவிர்க்க தனியார் பஸ்களை வாடகைக்கு பெற்று இயக்கும் நடவடிக்கையால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு கிளம்புவதால் பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும். இதை தவிர்க்க மாநிலம் முழுவதும் பல ஆயிரம் அரசு பஸ்களை இயக்கும் போக்குவரத்துக் கழகம், 200க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களையும் வாடகைக்குப் பெற்று இயக்க ஏற்பாடு செய்துள்ளது.
போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இந்த பஸ்களுக்கு ஒரு கி.மீ.,க்கு ரூ.55 வழங்கி ஏற்பாடு செய்துள்ளனர். மதுரையில் தனியாரிடம் 2 பஸ்கள் பெறப்பட்டுள்ளது. சென்னைக்கு போய் வர ஆயிரம் கி.மீ., வரை ஆகும். இதனால் அரசு ஒரு பஸ்சுக்கு ரூ.55 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு இயக்கும் பஸ்சில் ஒரு டிக்கெட்டின் விலை கேளம்பாக்கத்திற்கு ரூ.400, கோயம்பேடுக்கு ரூ.410 வசூலிக்கப்படுகிறது. அதையே தனியார் பஸ்சுக்கும் வசூலிப்பர்.
இந்த பண்டிகை காலத்தில் சென்னை செல்லும்போது பெரும்பாலும் பஸ் காலியாகத்தான் செல்லும். திரும்புகையில் முழுமையாக பயணிகள் வருவர் என்பதால் ரூ.22, 500 அளவுக்கே வசூலாகும். செல்லும்போது இதில் பாதியளவு நிரம்பினாலும் ரூ.40 ஆயிரம் வரையே வசூலாக வாய்ப்புள்ளது. இதேநிலை தீபாவளிக்கு முன், பின் என ஒருவாரத்திற்கு செலவாகும் என்பதால் அரசுக்கு நிதிஇழப்பே ஏற்படும். இதற்கு பதிலாக தற்போது எல்லா மாவட்டங்களிலும் புதிய தாழ்தள பஸ்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அவற்றை இயக்கினால் அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பில்லை, என்றனர்.
அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு பஸ்சுக்கு ஒரு கி.மீ.,க்கு இவ்வளவு என அரசுதான் தொகையை நிர்ணயித்துள்ளது. மதுரையைப் பொறுத்தவரை 20 பஸ்கள் தனியாரிடம் பெற்று இயக்கப்படுகிறது. அவை அனைத்துமே 55 சீட்கள் உள்ளவை. புதிய தாழ்தள பஸ்களை இயக்கினால் நஷ்டமே ஏற்படும். காரணம் 36 சீட் எண்ணிக்கை கொண்ட அவை ஒரு லிட்டர் பெட்ரோலில் 2 கி.மீ.,தான் இயங்கும். அதேசமயம் மற்ற பஸ்கள் 55 சீட்களுடன், 6 கி.மீ., வரை செல்லும். இதனால் தனியாரிடம் பெற்றதால் பெரிய அளவில் இழப்புக்கு வாய்ப்பில்லை. ஆனால் தீபாவளி நேரம் பயணிகள் சிரமத்தை தவிர்க்க முடியும்'' என்றார்.

