/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகள் திடீர் மறியல், கைது
/
மாற்றுத்திறனாளிகள் திடீர் மறியல், கைது
ADDED : பிப் 20, 2024 06:36 AM
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் மனு கொடுக்க பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து பட்டம் பயிலும் பார்வையற்ற மாணவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். கலெக்டர் அலுவலகத்தை விட்டு வந்தவர்கள் திடீரென திருவள்ளுவர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
* திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கலெக்டர் அலுவலகம் வந்தார். பாதுகாப்பு போலீசா்ர் அவரது பையை சோதனையிட்டபோது, மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றினர்.
விசாரணையில் சில ஆண்டுகளாக அவரது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதாக புகார் தெரிவித்துள்ளார். நடவடிக்கை இல்லாததால் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததாக தெரிவித்தார். அவரை எச்சரித்த போலீசார், மனு கொடுத்துச் செல்ல உதவினர்.

