ADDED : டிச 24, 2025 06:45 AM

மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் இயக்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய, மாநில பொதுத்துறை கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கோதண்டராமன் தலைமையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சட்டபூர்வ ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏப்.24 முதல் இன்று வரையான நிலுவைத்தொகை பி.எப்., பணிக்கொடை, ஓய்வூதியம் ஒப்படைப்பு ஊதியம் போன்றவற்றை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக பொதுச் செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.
மாநில பொருளாளர் சம்பத் துவக்கி வைத்தார். மின்வாரிய ஓய்வூதியர் சங்கமாவட்ட செயலாளர் பிச்சை, அஞ்சல் ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் அம்மையப்பன், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநில பொருளாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

