/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளிகளில் இரவு காவலர் பெற்றோர் எதிர்பார்ப்பு
/
பள்ளிகளில் இரவு காவலர் பெற்றோர் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 25, 2025 02:52 AM
பேரையூர் : பேரையூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் விலை உயர்ந்த உபகரணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக மாறி வருகிறது. பேரையூர் தாலுகாவில் 13 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் பள்ளிகளில் உள்ளன. உயர் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் என கட்டமைப்பு நவீனமாக்கும் பணிகள் நடந்தாலும் அனைத்தும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
பத்தாண்டுகளாக காலியாக உள்ள இரவு காவலர் நியமிக்கப்படவில்லை. எனவே தற்காலிகமாக அல்லது ஒப்பந்த அடிப்படையில் உள்ளாட்சித் துறைகளின் வாயிலாக இரவு காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.