/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும்
/
பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும்
பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும்
பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும்
ADDED : செப் 11, 2025 11:28 PM
மதுரை: சென்னை எழும்பூர் ஸ்டேஷனில் நடைபெறும் பராமரிப்பு பணியால் பாண்டியன், ராக்போர்ட் உள்ளிட்ட ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், பயணிகள் வசதிக்காக எழும்பூரில் இருந்தே வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, செப்.,17 முதல், மதுரை - எழும்பூர் 'பாண்டியன்' ரயில் (12638), எழும்பூர் வரை செல்லும். மறுமார்க்கத்தில் வழக்கம்போல் எழும்பூரில் இருந்தே புறப்படும். திருச்சி - எழும்பூர் - திருச்சி 'ராக்போர்ட்' ரயில் (12653/12654), செப்.,18 முதல் எழும்பூர் - திருச்சி 'சோழன்' ரயில் (22675), எழும்பூரில் இருந்து வழக்கம்போல் இயங்கும்.
தாம்பரத்தில் இருந்து...
* செப்.,17 முதல் நவ.,9 வரை, மதுரை வழியாக இயங்கும் கொல்லம் - எழும்பூர் 'அனந்தபுரி' ரயில் (20636), அதிகாலை 5:20 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (20635), செப்., 18 முதல் நவ., 10 வரை இரவு 8:20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
* செப்.,11 முதல் நவ.,10 வரை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் (22661), மாலை 6:20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (22662), செப்.,10 முதல் நவ.,9 வரை காலை 6:35 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
* செப்.,11 முதல் நவ., 10 வரை சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் (16751), இரவு 7:42 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (16752), செப்.,10 முதல் நவ.,9 வரை காலை 6:45 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.