/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிரதமருக்கு பழனிசாமி பாராட்டு உதயகுமார் பெருமிதம்
/
பிரதமருக்கு பழனிசாமி பாராட்டு உதயகுமார் பெருமிதம்
ADDED : மே 08, 2025 03:27 AM
மதுரை: பஹல்காம் தாக்குதல் நடந்த 14 நாட்களுக்குள் இந்திய ராணுவத்தினர் 'ஆபரேஷன் சிந்துார்' துல்லிய தாக்குதல் நடத்தி பதிலடி தந்திருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு முதலில் வாழ்த்து பரிமாறியவர் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி என எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் கூறினார்.
அவர் கூறியதாவது: நம் நாட்டவர் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் முகாம்களை நம் ராணுவத்தினர் அழித்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்திய தாக்குதலில் பாகிஸ்தான் மக்கள் யாரும் கொல்லப்படாதது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பிரதமர் மோடி நீதியை நிலைநாட்டியதற்கு முதலில் வாழ்த்து பரிமாறியவர் பழனிசாமி. நாட்டின் எல்லையில் காவல் தெய்வமாக காக்கும் ராணுவ வீரர்களுக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

