ADDED : மார் 16, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கள்ளிக்குடி - காரியாபட்டி ரோட்டில் கே.சென்னம்பட்டிக்கும் குராயூருக்கும் இடையே 2 நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று கள்ளிக்குடி தாசில்தார், கலெக்டரிடம் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த கடையால் இளைஞர்கள்கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும் கூறி மனு அளித்தனர்.
கடையை அகற்றாவிட்டால் கள்ளிக்குடியில் திருமங்கலம் - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட உள்ளதாகவும் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

