
குடிநீர் கால்வாயா, சாக்கடையா
சோழவந்தான் முள்ளிப்பாளையம் தென்கரையில் கால்வாயில் கழிவுநீர் கலக்கிறது. குடிநீர் வராத காலங்களில் கழிவுநீர் தேங்கி நோய்த்தொற்று ஏற்படுகிறது. கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கவுரிநாதன், தென்கரை.
ரோடு அமைக்க வேண்டும்
மதுரை வார்டு 37ல் நெல்லை வீதியில் ரோடுகள் சீரற்று இருக்கிறது. மேலமடை பாலம் வேலை நடக்கிறது. ரோட்டிலும் செல்ல முடியவில்லை, பாலத்திலும் செல்ல முடியாமல் வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். பலர் தடுமாறி விழுகின்றனர். மழைக்காலங்களில் நீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகரிக்கிறது. விரைந்து ரோடு அமைக்க வேண்டும்.
- - ராகவன், கோமதிபுரம்.
குடியிருப்புகளில் குப்பை குவியல்
பொதும்பு கற்பக விநாயகர் தெருவில் குடியிருப்பு பகுதிகளில் குப்பை கொட்டுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று அபாயம் ஏற்படுகிறது. குப்பையை தினமும் அகற்றினாலும் மக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
- - சதீஷ், பொதும்பு.
வாயக்காலில் கலக்கும் கழிவுநீர்
மதுரை வார்டு 8ல் கொடிக்குளம் வேலவன் நகரில் உள்ள வாய்க்காலில் அருகில் உள்ள கட்டடங்களில் கழிவுநீர் குழாய்கள் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் வாய்காலில் கழிவுநீர் கலந்து சில நேரங்களில் ரோட்டில் ஓடுகிறது. இடத்தை கடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். நோய்த்தொற்று ஏற்படுகிறது. மழைக்காலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. பல முறை புகார் அளித்தும் தீர்வு இல்லை. பன்றிகள் சுற்றித்திரிகின்றன. உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.
- முத்துராமன், கொடிக்குளம்.
மேம்பாலம் சீரமைக்கப்படுமா
மதுரை தெற்குவாசல் மேம்பாலம் தடுப்புச் சுவரின் நடுப்பகுதி சேதமடைந்து உள்ளது. பல ஆண்டுகளாக வலுவிழந்த நிலையில் உள்ளது. முழுமையாக சீரமைக்க வேண்டும். பாலம் மோசமாக உள்ளதால் வாகனங்கள் நகர்ந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
-- வெங்கடகிருஷ்ணன், அவனியாபுரம்.

