ADDED : நவ 07, 2025 07:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி தங்கச்சாமி மகன் பிரேம்குமார் 25. தனியார் மில் ஊழியர். இவருக்கும் திண்டுக்கல் பட்டிவீரன்பட்டி அடுத்த அய்யங்கோட்டை புதுார் ஞானவேல் மகள் ரூபினி தேவிக்கும் 2 மாதங்களுக்கு முன் திருமணமானது.
இவர்களது வீட்டின் மாடி அறையில் மின் வேலை நடக்கிறது.
நேற்று மாலை ரூபிணி தேவி மாடிக்கு துணி காயப்போட சென்ற போது மின்சாரம் தாக்கி இறந்தார்.
ரூபினி தேவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பாக மதுரை -திண்டுக்கல் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் பேச்சு வார்த்தையை தொடர்ந்து மறியல் கை விடப்பட்டது.

