/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேசிய நீச்சல் போட்டி: மாணவி சாதனை
/
தேசிய நீச்சல் போட்டி: மாணவி சாதனை
ADDED : டிச 21, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: இந்திய பள்ளிகளுக்கு இடையேயான 69வது தேசிய நீச்சல் போட்டி டில்லியில் நடந்தது.
இதில் மதுரை லீ சாட்லியர் பள்ளி மாணவி ரோஷினி 19 வயது பிரிவின் கீழ் 200 மீட்டர் ப்ரீஸ்டைல், 200, 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவுகளில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்றார். மேலும் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டியை 2.23 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
இவரை மாநில நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாவட்ட நீச்சல் சங்கச் செயலாளர் கண்ணன் பாராட்டினர்.

