ADDED : ஆக 24, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் தமிழ்த்துறை, தமிழ் உயராய்வு மையம் சார்பில் முத்தமிழ் விழா நடந்தது.
இணைப் பேராசிரியர் சுஜா வரவேற்றார். தமிழ்த்துறைத் தலைவர் டயானா கிறிஸ்டி பேசினார். சிறப்பு விருந்தினர் சுப்பிரமணி இணையத்தில் தமிழ் பயன்பாடு குறித்தும், தமிழ் வலைதளங்கள், மின் மொழிபெயர்ப்புகள், அகரமுதலிகளின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். முதுகலை மாணவி பால மீனா நன்றி கூறினார்.
2ம் நாள் நிகழ்வு முதல்வர்பாத்திமா மேரி தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக திருச்சி தனலட்சுமி கல்லுாரி இணைப்பேராசிரியர் விஜயசுந்தரி பங்கேற்றார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. உதவிப்பேராசிரியர் பொன்னி தொகுத்து வழங்கினார். ஆய்வாளர்கள்ஆண்டாள், சக்திலட்சுமி நன்றி கூறினர்.