ADDED : பிப் 15, 2026 06:19 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: பிப்.15-: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கணிதவியல் உயராய்வு மையம் சார்பில் கிங்ஸ் மேக்ஸ் என்ற தலைப்பில் பிற கல்லுாரி மாணவர்களுக்கு இடையேயான பல்திறன் போட்டிகள் நடந்தன. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்.
துறைத்தலைவர் பவானி வரவேற்றார். தியாகராஜர் கல்லுாரி உதவிப் பேராசிரியர் அன்பழகன் பேசினார். 16 கல்லுாரிகளைச் சேர்ந்த 362 மாணவர்கள் கணிதத் திறன், பகுப்பாய்வு ஆற்றல், குழுப் பணித்திறன் உள்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
காந்தி கிராமிய பல்கலை மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர். தியாகராஜர் கல்லுாரி மாணவர்கள் 2ம் இடம் வென்றனர். பேராசிரியர் சுமதி ஒருங்கிணைத்தார். பேராசிரியர் சீனிராஜ் நன்றி கூறினார்.
