/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மண்டை ஓட்டைத் திறக்காமல் மூக்கு வழியாக கட்டியை அகற்றி மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் சாதனை

ADDED : நவ 08, 2025 02:01 AM
மதுரை: மூளையின் முன் பகுதியில் பார்வை நரம்புகளை அழுத்தும் வகையில் கட்டிகள் இருந்த 3 பெண்களுக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், 'எண்டோஸ்கோபிக்' முறையில் தழும்பில்லாத (இ.இ.ஏ.,) அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பார்வை மீட்கப்பட்டது.
தென்மாவட்டத்தில் முதன்முறையாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சை முறை குறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் செல்வமுத்துக்குமரன் கூறியதாவது: மூளையில் ஏற்படும் கட்டிகளில் 30 சதவீதம் மெனிஞ்சியோ எனப்படும் மூளை, முதுகுத்தண்டுவடத்தை பாதிக்கும் கட்டிகள். இதில் 'பிளானம் ஸ்பெனாய்டேல்' வகையை அரிதான கட்டி என்கிறோம். இது தானாக உருவாகலாம். மரபணு காரணிகள் அல்லது ஹார்மோன் மாற்றங்களால் கட்டி வரலாம். அரிய வகைக் கட்டியால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் பார்வையை இழக்கும் நிலையில் மருத்துவமனை வந்தனர். அதாவது மூளைக்கும் மூக்குக்கும் இடையில் பார்வை நரம்புகளுக்கு அருகில் இக்கட்டி இருந்ததால் பார்வை நரம்புகளை அழுத்தி அவர்களின் பார்வையைப் பாதித்திருந்தது.
மண்டை ஓட்டின் ஒரு பகுதியை அகற்றி, கட்டி இருக்கும் இடத்தைச் சென்றடைய மூளையை விலக்கிச் செய்யப்படும் திறந்தநிலை அறுவை சிகிச்சைக்கு (கிரானியோட்டமி) பதிலாக, மண்டை ஓட்டின் அடியில் இருந்த கட்டிகளை அகற்ற, 'எக்ஸ்டென்டட் எண்டோநேசல் எண்டோஸ்கோபிக்' (இ.இ.ஏ.,) என்ற புதிய நுண் அறுவை சிகிச்சை முறையை பயன்படுத்தினோம்.
தென் தமிழகத்தில் இது முன்னோடி சாதனை. இந்த நவீன சிகிச்சையில் மண்டை ஓட்டைத் திறக்காமல் 'எண்டோஸ்கோப்' கருவி மூலம் மூக்கு வழியாகவே கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்தனர். டாக்டர்கள் செந்தில்குமார், கவுதம் குஞ்சா, மயக்கவியல், நரம்பியல், கண் மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.