/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கோயில்களில் மஹா சிவராத்திரி பூஜை
/
குன்றத்து கோயில்களில் மஹா சிவராத்திரி பூஜை
ADDED : மார் 09, 2024 07:44 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு விடிய விடிய அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு மாலை 5:30முதல் இரவு 12:00 மணி வரை நான்கு கால பூஜை நடந்தது.
மலைக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு ஐந்து கால பூஜை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு இரண்டு கால பூஜை, மலைமேலுள்ள காசி விசுவநாதர், கீழ ரதவீதி அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது.
கூடல்மலை தெரு கட்டிக்குளம் மாயாண்டிசாமி கோயில் சிவபெருமான், கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் சொக்கநாதர், திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதருக்கு ஐந்து கால பூஜை நடந்தது.

