sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்ட நிகழ்ச்சிகள்

மதுரை மாவட்ட நிகழ்ச்சிகள்

மதுரை மாவட்ட நிகழ்ச்சிகள்


ADDED : மார் 26, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 07:14 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோயில் * பங்குனி பிரம்மோற்ஸவம் - 7ம் நாள்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, திருக்கல்யாணம், காலை 9:00 முதல் 10:15 மணிக்குள், விளக்கு பூஜை, மாலை 4:00 மணி, புஷ்பப்பல்லக்கில் உலா, மாலை 6:00 மணி.

* பங்குனி 2ம் வெள்ளியை முன்னிட்டு ராஜ அலங்காரத்தில் சுவாமி: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, விளாங்குடி, இரவு 7:00 மணி.

* பங்குனி திருவிழா -- சுவாமி சிலைகள் ஊர்வலம்: வீரகாளியம்மன் கோயில், தும்பைபட்டி, மாலை 5:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

ராம நவமி * வைதிக சமாஜம், தபால்தந்தி நகர், மதுரை, விக்னேஸ்வர பூஜை, காலை 8:30 மணி, ராம சகஸ்ரநாம அர்ச்சனை, காலை 9:30 மணி, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், காலை 10:00 மணி, ராமர் பஜனை, ஜனன கட்டம் வாசித்தல், பராபவ ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடுதல், காலை 11:30 மணி.

* லட்சார்ச்சனை விழா: யாதவ பண்பாட்டுக் கழகம், 120 அடி ரோடு, சர்வேயர் காலனி, மதுரை, காலை 7:00 மணி, 'உதித்தனன் உலகம் உய்ய' - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - பிரணதார்த்திஹரன், காலை 11:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, விஷ்ணு சகஸ்ரநாமம், மாலை 6:00 மணி, ஆஞ்சநேய உற்ஸவம், ஏற்பாடு: புதுார் ராம பக்த சபை, மாலை 6:30 மணி.

* விசேஷ பூஜை: சின்மய மீனாட்சி, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், காலை 9:30 முதல் 11:30 மணி வரை.

* உற்ஸவம்: துர்கா இல்லம், 7/28, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, விஷ்வக்னேஸ்வர பூஜை, வசிஷ்ட மகரிஷி விழா, ஏற்பாடு: ராமநவமி உற்ஸவ சபை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* ராம நவமியை முன்னிட்டு ராமாயண தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - தியாகராஜர் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் துர்காதேவி, கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ராம ஜனனம்: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:30 மணி.

பள்ளி, கல்லுாரி * வாய்ஸ் ஆப் எஸ்.ஏ.சி.எஸ்.,'26 - வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: ராஜாமுத்தையா மன்றம் முதல் காந்தி மியூசியம் வரை, மதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன், எம்.ஏ.வி.எம்.எம்., சபை தலைவர் பாஸ்கரன், தாளாளர் கணேசன், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., பொறியியல் கல்லுாரி, ரோட்டரி கிளப் ஆப் திருநகர், காலை 7:00 மணி.

* தருமராஜ் எழுதிய 'ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி' நுால் வெளியீடு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: எழுத்தாளர்கள் நவீனா, சீனிவாச ராமானுஜம், ஸ்டாலின் ராஜாங்கம், சாம்ராஜ், ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், மாலை 5:30 மணி.

* கிரோனிக்ஸ் - தொழில்நுட்ப கருத்தரங்கு: எஸ்.ஆர்.எம்., பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் துரைராஜ், சிறப்பு விருந்தினர்: வி7 லான்சர்ஸ் நிறுவன தலைவர் கவுதம், காலை 10:00 மணி.

* ஆண்டுவிழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஸ்ரீநிதி முதலீட்டு குழும நிறுவனர் வெங்கடரமணன், காலை 9:30 மணி.

* ரோட்டராக்டர் பிறந்தநாள் விழா: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்பு விருந்தினர்: ஓட்டல் பார்க் பிளாசா நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், சிறப்புரை: ரோட்டரி கிளப் ஆப் மதுரை மிட் டவுன் நிர்வாக தலைவர் ரத்தினராஜ், ஏற்பாடு: கல்லுாரி ரோட்டராக்ட் கிளப், காலை 11:00 மணி.

* கணினி யுகத்தில் தவிர்க்கமுடியாத செயற்கை நுண்ணறிவு - கருத்தரங்கம்: ஆயிர வைசியர் கல்லுாரி, எம்.சத்திரப்பட்டி, தலைமை: முதல்வர் சிவாஜி கணேசன், சிறப்பு விருந்தினர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி உதவி பேராசிரியர் உஷா தேவி, காலை 11:00 மணி.

பொது * மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கும் தினமலர், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:30 முதல் மாலை 6:30 மணி வரை.

* சுய வேலைவாய்ப்பு பயிற்சி, மாதாந்திர சர்வ சமய வழிபாடு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பயிற்றுநர்: மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:15 மணி.

* தேசிய ஜூட் வாரியம் நடத்தும் விழிப்புணர்வு பயிற்சி: ஓட்டல் தங்கம் கிராண்ட், காளவாசல், மதுரை, தலைமை: பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம், சிறப்பு விருந்தினர்: வாரிய இயக்குநர் கிஷான் சிங் குக்ட்யல், ஏற்பாடு: பெட்கிராட், காலை 11:00 மணி.

* தமிழ் படித்தால் உலகம் உங்கள் கையில் - தமிழ்க்கூடலுரை: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, சிறப்புரை: பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் செந்தில் முருகன், காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us