தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்ட நிகழ்ச்சி

மதுரை மாவட்ட நிகழ்ச்சி

மதுரை மாவட்ட நிகழ்ச்சி


ADDED : மார் 28, 2026 08:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 08:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * பங்குனி பிரம்மோற்ஸவம் - 9ம் நாள்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, தேரோட்டம், காலை 7:30 முதல் 8:30 மணிக்குள், சிம்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி உலா, மாலை 6:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.

* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்து சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு * லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* ராமநவமி உற்ஸவம்: துர்கா இல்லம், 7/28, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, பராஸர மஹரிஷி விழா, மாலை 6:00 மணி, ஆஞ்சநேய அஷ்டோத்திரம், மாலை 6:30 மணி.

* கோள்களும், மனிதவாழ்வும்: நிகழ்த்துபவர் - ஜோதி சண்முகம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி.

* ஏகாதசியை முன்னிட்டு அகண்ட ஹரே ராம மகாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி, அபிஷேகம், காலை 11:00 மணி, சத்சங்கம், மதியம் 1:00 மணி.

பள்ளி, கல்லுாரி * விடுதி நாள் விழா: மேயர் ராதாகிருஷ்ணன் விடுதி, யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், சிறப்புரை: ஓட்டல் பார்க் பிளாசா நிறுவனர் கே.பி.எஸ்.கண்ணன், காலை 10:30 மணி.

பொது * மாணவர்களுக்கான உயர்கல்வி ஆலோசனைகளை வழங்கும் தினமலர், கோவை ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை.

* பங்குனி மாத சிறப்பு நிகழ்ச்சிகள்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, மும்பை, பெங்களூரு நிபுணா ஆர்ட்ஸ் அகாடமி விஸ்வாம்ப்ரா குழுவின் நாட்டிய நிகழ்ச்சி, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

* தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற சண்முக திருக்குமரனின் 3 நுால்கள் வெளியீடு, உலக மகளிர் தின விழா, சண்சரண் தங்க மகள் விருது வழங்கும் விழா: கலைஞர் நுாலகம், மதுரை, தலைமை: தேவகி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் நாகேந்திரன், சிறப்பு விருந்தினர்: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விமலா, ஏற்பாடு: சண்சரண் சமூகம், கல்விநல அறக்கட்டளை மதுரை இலக்கியப்பேரவை, காலை 9:00 மணி.

* 'என்றும் மகிழ்வோம் எந்தமிழ் சிந்தனையில்' - சிந்தனை கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.

* ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஓய்வுபெற்ற ஊழியர்கள் பொதுக்கூட்டம்: நகரத்தார் சங்கம் அரங்கம், திருப்பரங்குன்றம், பங்கேற்பு: பல்வேறு மாவட்ட வங்கி ஊழியர்கள், காலை 9:00 மணி.

* இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், சிறப்பு விருந்தினர்: இயற்கை டாக்டர் நிரஞ்சனா, ஆமூர் ஆரோக்கிய பள்ளி இயக்குநர் ரஞ்சித்குமார், காலை 10:00 மணி.

* பன்னாட்டு சமூக செயல்பாட்டாளர்கள் கவுன்சில், ஊழல் ஒழிப்பு இயக்க மதுரை மண்டல கலந்தாய்வுக் கூட்டம்ஊ கண்ணார திருமண மண்டபம், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us