ADDED : ஏப் 16, 2026 10:40 PM
கோயில் * அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடக்க நிகழ்வாக கொட்டகை முகூர்த்த விழா, ஆயிரம் பொன்சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சி: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, தலைமை: கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன், காலை 7:35 மணிக்கு மேல் 8:05 மணிக்குள், வண்டியூர் தேனுார் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்தம், காலை 9:45 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்.
* சித்திரை முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு புன்னகை அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி, 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.
பக்தி சொற்பொழிவு * சங்கர ஜெயந்தியை முன்னிட்டு 'ஆதிசங்கரரின் ஞானாமிர்தங்கள்' சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கிருஷ்ணா, சாரதாம்பாள் கோயில், சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை.
* திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* சித்திரை அமாவாசையை முன்னிட்டு சாய் பஜன்: நிகழ்த்துவோர் - கிழக்கு சமிதி சாய் பஜன் அன்பர்கள், ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது * சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், அருளுரை: காந்திய சிந்தனையாளர் தேவதாஸ் காந்தி, ஏற்பாடு: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் (செப்சிரா), மாலை 6:00 மணி.
மருத்துவம் * உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்குமான இரைப்பை, குடல், கல்லீரல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம்: ப்ரீதி மருத்துவமனை, உத்தங்குடி, காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.
* இலவச ரத்தவியல் மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, சொக்கிகுளம், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு * 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடகளம், குழு விளையாட்டு கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
