/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: பின்னணி என்ன?
/
மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: பின்னணி என்ன?
மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: பின்னணி என்ன?
மதுரையில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: பின்னணி என்ன?
ADDED : ஏப் 25, 2024 05:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரயில் நிலையம் வளாகத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி டோனாவூரைச் சேர்ந்த சுந்தரி என்பவர் தனது 6 மாத பெண் குழந்தையான சக்திபிரியா உடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது 33 வயது பெண் ஒருவர் சித்திரை திருவிழாவுக்கு வந்திருப்பதாக கூறி அவருக்கு அருகில் படுத்து உறங்கி உள்ளார்.
காலையில் எழுந்து பார்த்த போது 6 மாத பெண் குழந்தையை காணவில்லை. மேலும் அருகில் படுத்திருந்த 33 வயது பெண்ணையும் காணவில்லை. தாய் சுந்தரியின் புகாரை அடுத்து, செந்தாமரை மற்றும் மகேஸ்வரி ஆகிய 2 பெண்களை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். 6 மாத குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.