/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சோலைமலையில் சோமவாரம் கார்த்திகை தீபத் திருவிழா
/
சோலைமலையில் சோமவாரம் கார்த்திகை தீபத் திருவிழா
ADDED : நவ 17, 2025 02:04 AM
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் இன்று முதல் சோமவாரம், கார்த்திகை தீபத் திருவிழா ஆரம்பமாகிறது.
கார்த்திகை முதல் நாளான இன்றுமுதல் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர்.
இம்மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவார தினம்), சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம் செய்யப்படுவதுடன் திரளான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்வர்.
அவ்வகையில், நவ. 17 (இன்று), 24, டிச.1, 8, 15ல் காலை 11:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு மண்டபத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
இறுதி சோமவார தினமான டிச. 15ல் மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. டிச., 3ல் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்தில் கார்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், மேலாளர் தேவராஜ், அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

