/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கள்ளிக்குடி மேம்பாலம் 2026 ஜூனில் முடியும்'
/
'கள்ளிக்குடி மேம்பாலம் 2026 ஜூனில் முடியும்'
ADDED : டிச 24, 2025 06:38 AM
திருமங்கலம்: கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் ரூ. 27 கோடி மதிப்பிலும், கள்ளிக்குடியில் ரூ. 29 கோடியிலும் மேம்பால பணி நடக்கிறது. இப்பணிகளை எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார்.
அவர் கூறியதாவது: 2026, ஜூனுக்குள் இப்பாலம் கட்டும் பணி முடிவடையும். எய்ம்ஸ் மருத்துவமனை ஜனவரியில் இடம் மாற்றம் செய்யப்படும் எனவும், வெளிப்புற நோயாளிகள் பிரிவும், பெண்கள் விடுதியும் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆய்வுகளை செய்ய உள்ளோம்.
மத்திய அரசின் பணிகள் மிகவும் தொய்வாக நடக்கிறது. மதுரைக்கு வரவேண்டிய ஒத்தக்கடை- - திருமங்கலம் மெட்ரோ திட்டப் பணிகளை நிராகரித்துள்ளனர். இது மதுரையின் வளர்ச்சியை பாதிக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதும், சந்தனக்கூடு விழாவும் சுமுகமாக நடந்தது. வேலையில்லாத பா.ஜ .,வினர் திருப்பரங்குன்றத்தில் அமைதியை குலைக்க முயற்சித்தனர். அமித்ஷாவின் கைக்கூலியாக செயல்படும் அ.தி.மு.க., வை திருப்பரங்குன்றம் மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றார்.

