/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு: கட்சிகளுடன் ஆலோசனை விரைவில் வாக்காளர் பட்டியல் திருத்தம்
/
ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு: கட்சிகளுடன் ஆலோசனை விரைவில் வாக்காளர் பட்டியல் திருத்தம்
ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு: கட்சிகளுடன் ஆலோசனை விரைவில் வாக்காளர் பட்டியல் திருத்தம்
ஓட்டுச்சாவடிகள் அதிகரிப்பு: கட்சிகளுடன் ஆலோசனை விரைவில் வாக்காளர் பட்டியல் திருத்தம்
ADDED : செப் 17, 2025 07:24 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் 320 ஓட்டுச் சாவடிகள் பிரிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து இன்று(செப்.17) மாலை அரசியல் கட்சிகளுடன் கலெக்டர் பிரவீன்குமார் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் 2026 ஏப்ரல், மேயில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் செப்டம்பரில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும். பின்னர் வாக்காளர்கள் சேர்க்கை, நீக்கம், திருத்தம், தொகுதி மாற்றம் குறித்த பணிகள் நடைபெறும். 2026 ஜனவரியில் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அதன்பின்னும் சேர்த்தல், நீக்கம், திருத்தத்திற்கு படிவங்கள் வழங்கி தேர்தல் வரை இப்பணிகள் நடைபெறும்.
இப்பணிகளுக்கு இடையே தேர்தல் நெருங்குவதால் ஓட்டுச் சாவடி பணிகள் துவங்கியுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் 1200 ஓட்டுகளுக்கு மேல் உள்ள ஓட்டுச் சாவடிகளை பிரிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சிபிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் இக்கூட்டம் இன்று நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் 2752 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 1200க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் 320க்கும் மேல் உள்ளன. அவற்றை பிரிக்க முடிவு செய்துள்ளது குறித்து இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடக்க உள்ளது.
இதையடுத்து பீகாரில் நடந்தது போல தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி விரைவில் துவங்க வாய்ப்புள்ளது. இப்பணிக்கு அறிவிப்பு செய்து வீடுவீடாக ஆய்வு செய்ய மூன்று மாதங்களாவது தேவைப்படலாம். இதனால் இந்தாண்டு இறுதிக்குள் இப்பணியும் நடக்க வாய்ப்புள்ளது.