ADDED : ஏப் 10, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கே.புதுார் தொழிற்பேட்டையில் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் ஏப். 12, 13ல் ஏற்றுமதி இறக்குமதி, ஏப்., 19, 20ல் பாரம்பரிய அரிசி ரகங்களில் மதிப்பு கூட்டுதல் குறித்த கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஏற்றுமதி இறக்குமதி பயிற்சியில் எந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம், வெளிநாட்டு வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்வது, இன்சூரன்ஸ், கப்பலில் அனுப்ப வழிமுறை, விலை நிர்ணயம் கற்றுக் கொடுக்கப்படும். அலைபேசி: 8695646417. கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், துாயமல்லி பாரம்பரிய அரிசியை பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி கற்றுத்தரப்படும். அலைபேசி: 86670 65048.

