/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீரியமிக்க விதை போன்றது நேர்மையான எண்ணம்: நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேச்சு

ADDED : ஆக 31, 2025 04:56 AM
மதுரை: ''நேர்மையான எண்ணம் வீரியமிக்க விதை போன்றது. மண்ணுக்குள் புதைந்தாலும் முட்டி மோதி உயிர் பெற்று ஒரு காட்டையே உருவாக்கும்'' என பரவை மங்கையர்க்கரசி பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா பேசினார்.
முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லுாரித் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தார்.
மாணவர்களுக்கு பட்டம் வழங்கி நீதிபதி பேசியதாவது: மாணவர்களான நீங்கள் இதுவரை ஆசிரியர், பெற்றோர் சொல்லிக் கொடுத்தபடி வளர்ந்திருப்பீர்கள். இனிமேல் அனுபவம் என்ற புதிய உலகிற்குள் நுழையப் போகிறீர்கள். அதுதான் உங்களுக்கு கற்றுக் கொடுக்கும்.
சோசியல் மீடியாவில் நேரம் அதிகம் செலவிடும் போது தனிமைப்படுத்தப்படுகிறோம். எனவே பெற்றோரும், பிள்ளைகளும் நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள்.
வலைதளங்களை குற்றம் சொல்லாமல் சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதும் தோல்வியடைவதும், உங்கள் கடினஉழைப்பில், முயற்சியில் தான் இருக்கிறது.
நேர்மையான எண்ணம் வீரியமிக்க விதை போன்றது. மண்ணுக்குள் புதைந்தாலும் முட்டி மோதி உயிர் பெற்று ஒரு காட்டையே உருவாக்கும் ஆக்கப்பூர்வ சக்தி கொண்டது என்றார்.