ADDED : ஆக 24, 2025 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் ஹிந்து மகாசபா பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் சங்கன் வரவேற்றார்.
மாநில துணைத்தலைவர் செல்லத்துரை, விவசாய அணி செயலாளர் ரமேஷ் பாண்டியன் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் வெள்ளை தம்பி, தெய்வேந்திரன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். விநாயகர் ஊர்வலத்தை கலெக்டரின் நேரடி கண்காணிப்பில் நடத்த வேண்டும்.
சினிமாவில் கடவுள் மற்றும் வழிபாட்டு முறைகளை களங்கப்படுத்துவதை தடுக்க தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும். கோயில் வருமானம் ஹிந்துக்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.