/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெற்றோர், குழந்தைகள் சந்திப்புக்கு சிறைகளில் அறை உயர்நீதிமன்றம் நம்பிக்கை
/
பெற்றோர், குழந்தைகள் சந்திப்புக்கு சிறைகளில் அறை உயர்நீதிமன்றம் நம்பிக்கை
பெற்றோர், குழந்தைகள் சந்திப்புக்கு சிறைகளில் அறை உயர்நீதிமன்றம் நம்பிக்கை
பெற்றோர், குழந்தைகள் சந்திப்புக்கு சிறைகளில் அறை உயர்நீதிமன்றம் நம்பிக்கை
ADDED : பிப் 28, 2024 06:20 AM
மதுரை, : மத்திய சிறைகளில் கைதிகளாக உள்ள பெற்றோரை சந்திக்க வரும் குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையம் போல் தனி அறை ஏற்படுத்த தாக்கலான வழக்கில் நிர்வாக ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் 6 மாதங்களில் பணி நிறைவேற்றப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்தது.
மதுரை ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் மத்திய சிறை, பெண்கள் சிறப்பு சிறைகளில் கைதிகளை சந்திக்க அவர்களின் குழந்தைகள் வருகின்றனர். பலர் முன்னிலையில் தனது தந்தை அல்லது தாயை சிறையில் சந்திக்கும்போது குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். சமூக புறக்கணிப்பிற்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க அங்கன்வாடி மையம் போல் வண்ண ஓவியங்கள், படங்கள், விளையாட்டு உபகரணங்கள் இடம்பெறும் தனி சந்திப்பு அறைகளை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பெற்றோருடன் பேசி மகிழ முடியும். மத்திய சிறை, பெண்கள் சிறைகளில் குழந்தைகளுக்காக தனி சந்திப்பு அறைகள் ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் சிறைகளில் ரூ.1.50 கோடியில் குழந்தைகள் சந்திப்பு அறை அமைக்கப்படும். திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் பணி துவங்கும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: ஒப்புதல் கிடைத்ததும் 6 மாதங்களில் பணி நிறைவேற்றப்படும் என இந்நீதிமன்றம் நம்புகிறது.
வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

