ADDED : ஏப் 12, 2025 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட் கிராட் நிறுவனத்தில் ஏப். 15 முதல் ஒருமாத கம்ப்யூட்டர் மற்றும் இலவச டெலிகாலிங் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி, எம்.எஸ். வேர்ட், எக்செல், போட்டோஷாப், கோரல் டிரா பயிற்சிக்கு பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.
இலவச சீருடை, ஊக்கத் தொகை, வேலை வாய்ப்பு வழங்கப்படும். மத்திய அரசின் சான்றிதழ் உண்டு. அலைபேசி: 93452 02324.

