/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளிக்கு வேலி அமைத்த முன்னாள் மாணவர்கள்
/
பள்ளிக்கு வேலி அமைத்த முன்னாள் மாணவர்கள்
ADDED : டிச 30, 2025 07:35 AM

பாலமேடு: அலங்காநல்லுார் ஒன்றியம் டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் முன்னாள் மாணவர்கள் கம்பி வேலி அமைத்து தந்துள்ளனர்.
இப்பள்ளிக்கு 2024 ஜூனில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் 800 மீ., நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட ரூ. 41 லட்சம் ஒதுக்கப்பட்டது, கடந்தாண்டு டிசம்பரில் அஸ்திவாரம் போட்ட நிலையில் பணிகள் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரரால் முன்பக்க சுற்றுச்சுவர் அகற்றப்பட்டதால் பள்ளி வளாகம் திறந்த வெளியானது. இதனால் பசு மாடுகள், நாய்கள் உள்ளே கூட்டமாக நுழைந்து மரத்தடியில் அமர்ந்து படிக்கும், உண்ணும் மாணவர்களை அச்சுறுத்துவதால் சிரம பட்டனர்.
பள்ளி நிர்வாகம், கிராமத்தினர் கூறுகையில், ''அஸ்திவாரம், துாண் களுக்கான கம்பிகளை தரமற்ற முறையில் அமைத்து சென்றனர். ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் ஓராண்டாக பணிகள் துவங்கவில்லை.
இதே காலத்தில் நிதி ஒதுக்கிய பள்ளிகளில் சுற்றுச் சுவர் பணிகள் முடிந்துள்ளது. மாண வர்கள் பாதுகாப்பு கருதி முன்னாள் மாணவர்கள் முன்பக்கம் பாதுகாப்பு கம்பி வேலி அமைத்து உள்ளனர் என்றனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ''ஒப்பந்ததாரர் மேற்கொண்டுள்ள மற்ற பணிகளுக்கான நிதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. பள்ளிச் சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் என்றனர்.

