/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'வர்த்தகம், தொழில்துறையை பாதிக்காமல் ஜி.எஸ்.டி., விகிதம் மாற்ற வேண்டும்' உணவுப்பொருள் வியாபாரிகள் கோரிக்கை

ADDED : ஆக 24, 2025 04:21 AM
மதுரை: வர்த்தகம், தொழில்துறையை பாதிக்காமல் ஜி.எஸ்.டி., விகிதம் மாற்ற வேண்டும். வணிகர் சங்க அமைப்புகளின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு எடுத்துச் சொல்ல வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது: 2017 ஜூலையில் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டபோது வரி வருவாய் மாதம் ரூ.ஒரு லட்சம் கோடியை எட்டும்போது வரி விகிதத்தைக் குறைப்பதாக அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதியளித்தார். தற்போது மாதந்தோறும் ரூ.2 லட்சம் கோடியாக வருவாய் அதிகரித்துள்ளது. வரி விகிதம் மிக அதிகமாக உள்ளதால் சில துறைகளில் வரி ஏய்ப்பு செய்பவர்களால், உண்மையான வரி செலுத்தும் பங்குதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர். எந்தெந்த துறைகளில் வரி ஏய்ப்பு உள்ளதென குறிப்பிட்டு எங்கள் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூடுதல் செயலாளர் பங்கஜ் குமார் சிங்கை சந்தித்து 32 கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளோம்.
பல்வேறு உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும், எந்தவொரு தயாரிப்புகளையும் அல்லது பொருட்களையும் 12ல் இருந்து 18 சதவீதத்திற்கு மாற்றக்கூடாது. பொருட்களுக்கான வரி விகிதத்தைக் குறைப்பதன் மூலம் வருவாய் இழப்பு ஏற்படாது. ஜி.எஸ்.டி.,யை சரிசெய்வதன் மூலம் உணவுப்பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்படுவதோடு வரி ஏய்ப்பும் குறையும்.
வரவிருக்கும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் இக்கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றனர்.