ADDED : டிச 14, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் ஐந்து பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
மதுரையில் 10 நாட்களாக தினமும் 40 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் 40 பேர், நேற்று 41 பேர் காய்ச்சலுக்கு ஆளாகினர். மொத்தம் 113 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 9 பேர் குழந்தைகள்.
கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் ஐந்து பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மதுரையில் 2 நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் வரும் வாரத்தில் வைரஸ், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க கூடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

