ADDED : மார் 10, 2024 04:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதி மலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு காட்டுத்தீ பரவியது.
மலையிலுள்ள மரங்களில் பற்றிய தீ கொழுந்து விட்டு எறிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருந்தது. திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அந்த மலையில் மாலை 6:30 மணிக்கு மீண்டும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

