/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய் நிரம்பியும் சாகுபடிக்கு வழியில்லை; மூன்றாண்டுகளாக தவிக்கும் விவசாயிகள்
/
கண்மாய் நிரம்பியும் சாகுபடிக்கு வழியில்லை; மூன்றாண்டுகளாக தவிக்கும் விவசாயிகள்
கண்மாய் நிரம்பியும் சாகுபடிக்கு வழியில்லை; மூன்றாண்டுகளாக தவிக்கும் விவசாயிகள்
கண்மாய் நிரம்பியும் சாகுபடிக்கு வழியில்லை; மூன்றாண்டுகளாக தவிக்கும் விவசாயிகள்
ADDED : பிப் 28, 2024 06:09 AM

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் மானாவாரி கண்மாயின் மடைகள் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் மூன்றாண்டுகளாக சாகுபடி செய்ய இயலாமல் தவிக்கின்றனர்.
ஜெயக்குமார்: இது மானாவாரி கண்மாய். மழை பெய்தால் மட்டுமே நிரம்பும். இங்கு வைகை அணை தண்ணீர் வர வழி இல்லை. இக்கண்மாய் தண்ணீர் மூலம் 600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசனத்திற்காக தண்ணீர் வெளியேறும் மூன்று மடைகளும், வாய்க்கால்களும் 7 ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கிறது.
நடுமடை முற்றிலும் சேதம் அடைந்து, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. மூன்று ஆண்டுகளாக நல்ல மழை பெய்ததால் கண்மாய் நிரம்பியது. தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் தேங்கிய நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை.
சீரமைக்க நீர்வளத் துறையிடம் கோரிக்கை வைத்தால் அவர்கள் நிதி இல்லை எனக் கூறிவிட்டனர்.
கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் மட்டுமே விவசாயம் செய்கின்றனர். பலர் அருகிலுள்ள கிணறுகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி நெல் நடவு செய்கின்றனர்.
வழியில்லாத பலர் நிலங்களை தரிசாக போட்டு விட்டனர். சரியான விவசாயம் இல்லாததால் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் வைக்கோலை விலைக்கு வாங்கி வருகின்றனர். இதனால் கூடுதல் செலவாகிறது. சாகுபடி இல்லாததால் விவசாயிகள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். சேதமடைந்த மூன்று மடைகளையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

