ADDED : ஆக 12, 2025 06:38 AM

மதுரை: மதுரையில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை வடக்கு, தெற்கு மாவட்டங்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட செயலாளர்கள் முத்தையா, சுந்தரபாண்டியன் தலைமை வகித்தனர். மாநில பொது செயலாளர் அர்ச்சுனன், செயலாளர் முருகன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பழனியப்பன், மக்கள் பாதை இயக்க ஒருங்கிணைப்பாளர் அமுதா பேசினர். மாவட்ட தலைவர்கள் சிவாஜிகணேசன், பாண்டி, துணை தலைவர்கள் ராஜபத்மாநாபன், ராஜா, பங்கேற்றனர்.
மதுரையில் வேளாண் பல்கலை அமைக்க வேண்டும். 2019ல் மூடப்பட்ட அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும். நிலையூர் - கம்பிக்குடி கால்வாய் விரிவாக்க திட்டத்தை கழுவங்குளம், குசவபட்டி, விராதனுார், தேனுார் ஊராட்சி வரை நீடித்து 15 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

