/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
களை எடுக்க ஆட்கள் இல்லை கண்ணீரில் விவசாயிகள்
/
களை எடுக்க ஆட்கள் இல்லை கண்ணீரில் விவசாயிகள்
ADDED : டிச 11, 2024 06:05 AM
மதுரை: நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் விவசாய கூலிகள் வேலை பார்ப்பதால் ஒருபோக சாகுபடிக்கு நாற்று நட்ட வயலில் களை எடுக்க ஆட்கள் இன்றி வேதனைப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பாரதிய கிசான் சங்க மாநிலத் தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது: வாடிப்பட்டி, அலங்காநல்லுாரில் ஒருபோக சாகுபடிக்காக 6000 ஏக்கரில் நாற்று நடவு முடிந்துவிட்டது. அதற்கு மொத்தமாக ஆட்கள் கிடைத்தனர். இப்போது களை எடுக்கும் நேரம். ஒரு ஏக்கருக்கு 15 பேர் ஒரே நேரத்தில் கிடைத்தால் ஒரே நாளில் களையை அகற்றலாம்.
ஆனால் நுாறுநாள் வேலை திட்டம் நடப்பதால் 5 பேர் கூட கிடைக்கவில்லை. களை எடுக்காவிட்டால் பயிர்களின் வளர்ச்சி தடைபட்டு மகசூல் பாதிக்கப்படும்.
களை எடுக்கும் பணிகள் முடியும் வரை நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என பி.டி.ஓ., பொற்செல்வியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கூடுதல் கலெக்டரிடம் மனு கொடுக்க பரிந்துரைத்தார். விவசாயிகளின் நலனுக்காக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட வேண்டும் என்றார்.

