நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தேர்தல் ஆணையாளராக துணைத் தாசில்தார் ராஜ்குமார் செயல்பட்டார். மாநில நிர்வாகிகள் தமிழரசன், காசிதுரை முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் புதிய தலைவராக முகைதீன் அப்துல் காதர், செயலாளராக அசோக்குமார், பொருளாளராக ராம்குமார் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் துணைத் தலைவர்களாக மணிமேகலை, இங்கர்சால், சுரேஷ் பிரடெரிக் கிளமென்ட், திருமுருகன், முருகானந்தம், இணைச் செயலாளர்களாக இலக்கியா, செந்தில்குமரன், திருநாவுக்கரசு, நாகேந்திரன், ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர்.

