/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துணைமேயர் வார்டானாலும் சரிசெய்ய ஆளில்லை வீரகாளியம்மன் கோயில் பகுதியினர் குமுறல்
/
துணைமேயர் வார்டானாலும் சரிசெய்ய ஆளில்லை வீரகாளியம்மன் கோயில் பகுதியினர் குமுறல்
துணைமேயர் வார்டானாலும் சரிசெய்ய ஆளில்லை வீரகாளியம்மன் கோயில் பகுதியினர் குமுறல்
துணைமேயர் வார்டானாலும் சரிசெய்ய ஆளில்லை வீரகாளியம்மன் கோயில் பகுதியினர் குமுறல்
ADDED : ஏப் 10, 2025 06:42 AM

மதுரை: எங்கும் குப்பை, தெருநாய், மாடு தொல்லையாலும் அவதிப்படும் ஜெய்ஹிந்த்புரத்தில், மாநகராட்சிக்கு மெயின் ரோடு அமைப்பதில் இருக்கும் கவனம் குறுகிய ரோடுகளில் இல்லை என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.
மதுரை மாநகராட்சி வார்டு 80ல் ஜெய்ஹிந்த்புரம் மேற்கு பகுதி, வீரகாளியம்மன் கோயில் தெரு, நேதாஜி தெரு, நேரு தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கும் மாநகராட்சியின் நுாறு வார்டுகளிலும் உள்ள அதேரோடு, கழிவுநீர், சுகாதார கேடு உட்பட அடிப்படை பிரச்னைகள் அத்தனையும் இருக்கின்றன. வார்டு மக்கள் கூறியதாவது:
குப்பையை அகற்றுவதில்லை
ராம்குமார், ஜெய்ஹிந்த்புரம் மேற்கு: குப்பை வண்டிகள் சிறியதாக உள்ளதால், வீட்டில் குப்பையை சேமிக்கிறோம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வருகின்றனர். தெருக்களை சுத்தம் செய்து குவித்து வைப்பதையும் அகற்றுவதில்லை. அவை ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
காற்று மாசுபாடு ஏற்படுகிறது. ரோடு பள்ளம் மேடாக, தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல சிரமம் தருகிறது. மழைநீர் வடிகால் திட்டத்தை முழுமையாக்க வேண்டும். கோயில் திருவிழாவுக்காக இரண்டே நாளில் புதிய ரோடு அமைத்தனர். அவசரமாக அமைத்த ரோட்டினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தெருநாய்கள் தொல்லை
அருண்குமார், அண்ணாமுக்கிய வீதி: தெருநாய்கள் குறித்து புகார் அளிக்கும்போது மாநகராட்சி சார்பில் பிடித்துச் செல்கின்றனர். அவை திரும்பவும் இங்கே விடுவதால் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு தெருவில் 10 நாய்கள் உள்ளன. மாடுகளை இஷ்டம்போல ரோட்டில் திரிய விடுகின்றனர்.
மாடுகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். பாதாளச் சாக்கடை திட்டத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுமைப் படுத்த வேண்டும்.
முகாம்கள் நடத்துகிறோம்
நாகராஜன், துணைமேயர் (மார்க்சிஸ்ட்): எனது வார்டில் வீரகாளியம்மன் மெயின், குறுக்குத் தெருக்களில் 12 புதிய ரோடுகள், ரூ.1.36 கோடி செலவில் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு அமைத்துள்ளோம்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான டி.வி.எஸ்., நகர் - கோவலன் பொட்டல் வரை பாதாளச்சாக்கடை வசதி ஏற்படுத்தியுள்ளோம். வாட்ஸ்ஆப் குருப்பில் தினமும் ரேஷன் இருப்பு, மின்தடை, குடிநீர் நிறுத்த அறிவிப்பு செய்கிறோம். மக்கள் குறைகளைத் தெரிவித்தால் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுகிறது. அனைத்து வார்டுகளுக்கும் இலவச இ சேவை மையம், மாதம் ஒரு மருத்துவ முகாம், நல வாரிய முகாம் நடத்துகிறோம். அமைக்கப்படாத ரோடுகளுக்கென திட்டங்கள் உள்ளன. தெருநாய்கள் விரைவில் கட்டுப்படுத்தபடும் என்றார்.

