ADDED : அக் 27, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே வாவிடமருதுார் ரோட்டோரம் மின்கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்தன. சத்திரப்பட்டி ரோட்டில் வளைவான பகுதியில் மின்கம்பிகளின் இழுவை தாங்காமல் மின் கம்பங்கள் சாய்ந்து இருந்ததால் மின்விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சாய்ந்த மின் கம்பத்தை உடனே சரி செய்தனர்.

