ADDED : செப் 19, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பொன்மேனி கிழக்கு 2வது தெருவில் பல ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயனற்று கிடப்பதால் மக்கள் தண்ணீரின்றி தவிக்கின்றனர்.
இப்பகுதி மக்கள் கூறியதாவது: 2012-13 ஆண்டில் மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பொதுநிதியில் இருந்து இப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
4 ஆண்டுகளாக போரில் நீர் இல்லாமல் பயனற்று கிடக்கிறது. இதனருகில் புதிய 'போர்' போடப்பட்டும் பயனில்லை. இப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் நல்ல தண்ணீர் வாரம் இருமுறை மட்டுமே வருகிறது.
மற்ற நாட்களில் குடிநீருக்காக தவிக்கும் நிலையுள்ளது. மாநகராட்சி சார்பில் இப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

