ADDED : செப் 24, 2026 02:03 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: தச்சம்பத்து அருகே டி.பாலகிருஷ்ணாபுரத்தில் மதுரை மெயின் ரோட்டோர பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளது.
டி. பாலகிருஷ்ணாபுரம் சுகாதார வளாகம் எதிரே மதுரை - சோழவந்தான் மெயின் ரோட்டோரம் 7 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் தார் ரோட்டின் கீழே பக்கவாட்டில் உட்புறமாக 3 அடி அகலத்திற்கு மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரோட்டின் மேற்பகுதி அந்தரத்தில் நிற்கிறது.
சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்திருப்பதால் பள்ளம் இருப்பதே பலருக்கு தெரிவதில்லை.
கனரக வாகனங்கள் செல்லும்போது ரோட்டின் மேல் பகுதி தரையில் புதைந்தும், டூவீலரில் ரோட்டோரம் செல்வோர் பள்ளத்தில் விழுந்தும் விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
