/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., கூட்டணிக்கு தோழமை கட்சிகள் வெடி மதுரை அ.தி.மு.க., உண்ணாவிரதத்தில் சூசகம்
/
தி.மு.க., கூட்டணிக்கு தோழமை கட்சிகள் வெடி மதுரை அ.தி.மு.க., உண்ணாவிரதத்தில் சூசகம்
தி.மு.க., கூட்டணிக்கு தோழமை கட்சிகள் வெடி மதுரை அ.தி.மு.க., உண்ணாவிரதத்தில் சூசகம்
தி.மு.க., கூட்டணிக்கு தோழமை கட்சிகள் வெடி மதுரை அ.தி.மு.க., உண்ணாவிரதத்தில் சூசகம்
ADDED : அக் 10, 2024 07:03 AM
மதுரை : ''தி.மு.க., கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகள், தி.மு.க., அரசுக்கு எதிராக இப்போதுதான் வாயை திறந்துள்ளன.
இது தொடக்கம் தான். கூட்டணிக்குள் வெடி வைக்கப்போகிறார்கள்'' என மதுரையில் நடந்த அ.தி.மு.க., ஜெ., பேரவை உண்ணாவிரதத்தில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் உண்ணாவிரதம் நடந்தது. ஜெ., பேரவை துணைச்செயலாளர்கள் வெற்றிவேல், சேதுராமானுஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தலைமை வகித்து மாநில செயலாளர் உதயகுமார் பேசியதாவது:
தி.மு.க., அரசு அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு மக்கள் சேவையில் பூஜ்ஜியமாக இருந்து வருகிறது. உண்ணாவிரத போராட்டம் மூலம் அக்டோபர் புரட்சியை பழனிசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். சாமானிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி சாதனை படைத்தவர் ஜெயலலிதா. அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவீதம் பெற்றுகொடுத்தவர் பழனிசாமி. சமூக நீதியை நிலைநாட்ட தி.மு.க., ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. சென்னை வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 பேர் உயிரிழந்துள்ளனர். மா.சு அமைச்சரால் தமிழகம் மாசடைந்துவிட்டது. மக்களுக்கு பச்சை துரோகத்தை தி.மு.க., அரசு செய்துள்ளது என்றார்.
கூட்டணிக்குள் வெடி
முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ பேசுகையில்,அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது குடும்பத்தினரை கோட்டை பக்கம் கூட வரவிடவில்லை. தி.மு.க.,வை ஸ்டாலின் குடும்பத்தினர் குத்தகைக்கு எடுத்து விட்டார்கள். அத்திப்பழம் பார்க்க அழகாக இருக்கும். பிரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது. அது போல தான் தி.மு.க., அரசு. விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற 5 பேர் உயிரிழந்ததற்கு திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளனர். கூட்டணி கட்சிகள் இப்போது தான் வாயை திறந்து உள்ளார்கள். இது தொடக்கம் தான். கூட்டணிக்குள் வெடி வைக்க போகிறார்கள் என்றார்.
யார்'பி' டீம்
கட்சி பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு பிறகு நான் தான் என்று சொன்ன பன்னீர் செல்வமும், தினகரனும் மண்ணைக் கவ்வி செல்லாக் காசாக இருந்து வருகிறார்கள். 2026ம் ஆண்டு அ.தி.மு.க.,விற்கு முடிவுரையை பழனிசாமி எழுதப் போவதாக தினகரன் பேசி வருகிறார். அவருக்கு என்ன தகுதி உள்ளது. பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக போட்டியிட்டுவிட்டு எந்த முகத்தை வைத்துக் கொண்டு மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைத்து கொள்ளுங்கள் என கேட்கிறார். பழனிசாமிக்கு முன்னால் பன்னீர் செல்வமும், தினகரனும் ஜீரோ தான்.
குடும்ப ஆட்சியை விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு தி.மு.க.,வில் இருந்து வெளியில் வந்த வைகோ இன்று தன் மகனுக்கு எம்.பி., பதவி வாங்கி கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறார். எங்களை பா.ஜ.,வின் 'பி' டீம் என்றார்கள். முதல்வர் டில்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு மெட்ரோ நிதி ஒதுக்கப்படுகிறது. யார் பா.ஜ.,வின் 'பி' டீம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு பேசினார்.
உண்ணாவிரதத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., நிறைவு செய்து வைத்தனர்.

