நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை வீரபாஞ்சான் ஆரோ லேப்பில் காந்திய சிந்தனை வட்டம் சார்பில் கஸ்துாரிபா, தில்லையாடி வள்ளியம்மை நினைவு சொற்பொழிவு நடந்தது. ஆரோ லேப் மனித வள மேம்பாட்டு மேலாளர் ஸ்வேதா முன்னிலை வகித்தார்.
காந்தி மியூசிய காப்பாட்சியர் நடராஜன் பங்கேற்று, ''பெண்கள் கஸ்துாரிபாய் போன்று பொது நலனுக்காக விட்டுக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தையும், மகாத்மா காந்தியின் நம்பிக்கைக்கும் ஏற்ற வகையில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றார். சத்திய சோதனை புத்தகத்தில் கஸ்துாரிபாயின் தீரம் என்ற அத்தியாயம் வாசிக்கப்பட்டது . ஏற்பாடுகளை மியூசிய செயலாளர் நந்தாராவ் செய்திருந்தார்.

