ADDED : ஜன 02, 2026 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தனியாமங்கலம் - இ. மலம்பட்டி செல்லும் 11 வது கால்வாயில் நேரடி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.
அதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் பதராகும் நிலை உருவானது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து முதன்மை, நிர்வாக பொறியாளர்கள் ரமேஷ், ஜெயராமன் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தினமலர் நாளிதழ். அதிகாரிகளுக்கு நன்றி கூறினர்.

