/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க., ஆட்சிக்கு வராது தினகரன் சொல்கிறார்
/
பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க., ஆட்சிக்கு வராது தினகரன் சொல்கிறார்
பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க., ஆட்சிக்கு வராது தினகரன் சொல்கிறார்
பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க., ஆட்சிக்கு வராது தினகரன் சொல்கிறார்
ADDED : செப் 11, 2025 11:30 PM
மதுரை: ''பழனிசாமிதான் தங்களது வெற்றியின் ரகசியம் என உதயநிதி சொன்னதை அ.தி.மு.க.,வினர் புரிந்து கொள்ள வேண்டும். உதயநிதி உண்மையை சொல்லியிருக்கிறார். துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க., ஆட்சிக்கு வராது'' என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் மீது எனக்கு தனிப்பட்ட கோபமில்லை. பன்னீர்செல்வம் விவகாரத்தில் அவர் நடந்து கொண்டது பிடிக்கவில்லை. அவர் நல்ல நண்பராக என்றும் என்னை சந்திக்கலாம். தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு பழனிசாமி என்ற ஒற்றை மனிதருக்கு காவடி துாக்குபவர்கள்(உதயகுமார்), ஜெ.,வுக்கு கோயில் கட்டியவர்களைதான் ஜெ., ஆன்மா சும்மா விடாது.
செங்கோட்டையனை தனிப்பட்ட வேறொரு காரணத்துக்காகவே ஜெயலலிதா நீக்கியிருந்தார். அதற்கு அரசியல் காரணம் அல்ல. செங்கோட்டையன் உள்ளிட்ட யார் எடுக்கிற முயற்சியும் நடக்காது என்பது எனக்கு தெரியும். பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை ஜெ., தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனியாகதான் இருக்கும். எங்கள் வழி தனி வழி. நாங்கள் அமைக்கின்ற கூட்டணி தான் ஆட்சியில் அமர போகிற கூட்டணி. இவ்வாறு கூறினார்.
விஜயகாந்த் போல் விஜய் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியபின் தினகரன் கூறியதாவது: ராமதாஸ், அன்புமணி வன்னியர் சமுதாய மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். 2006ல் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியது போல் விஜயும் தாக்கத்தை ஏற்படுத்துவார். அது என் கட்சிக்கும் பொருந்தும்.
என்னைப் பொறுத்தவரை ஒருவர் கட்சி துவங்கும் போது அண்ணன், தம்பி எனக் கூறிவிட்டு கட்சி துவங்கிய பின் கண்டபடி திட்டுபவன் நான் அல்ல.
எங்களை விமர்சனம் செய்தால் நாங்கள் விமர்சிப்போம். அ.ம.மு.க., சுதந்திரமான கட்சி. என்னை ஒருவர் துாண்டி விடுகிறார் என்பதே வருத்தம் அளிக்கிறது.
அதுவும் அண்ணாமலை துாண்டிவிடுகிறார் என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார்.