நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார்.
70 வயது நிரம்பிய அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது, சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், வனத்துறை, ஊரக வளர்ச்சிதுறை, ஊராட்சி செயலர் ஆகிய ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சி.ஐ.டி.யூ., தலைவர் மணவாளன், செயலாளர் சேகர், ஓய்வூதியர் சங்க செயலாளர் கிருஷ்ணன், நிர்வாகிகள் திருமுருகன், ராஜேந்திரன், அடைக்கண், சந்திரசேகர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

